அடுத்த அறிவிப்பாக, அரசுப் பள்ளிகளில் யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்கள் பகுதிநேரமா? முழு நேரமா? என்று தெளிவாகக் குறிப்பிடப்பட வில்லை.
2011-12 ம் கல்வியாண்டில் சட்டப்பேரவை விதி எண் 110 ன் கீழ் அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட 16549 ஆசிரியர்களில் யோகா ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு பகுதிநேரமாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் நெடுங்கால கோரிக்கையாக பணி நிரந்தர கோரிக்கை உள்ளது.
சென்ற 10.3.17 உண்ணாவிரதத்தில் பணியிட மாறுதல் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டு, 10 தினங்களில் அரசாணை வெளியிடப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
அதுபற்றி சட்ட சபையில் எவ்வித அறிவிப்பு வராதது ஏமாற்றமளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக