முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 5 மார்ச், 2014

பள்ளி சாவியை, ஏ.இ.இ.ஓ.,விடம் ஒப்படைக்க துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு

ஸ்டிரைக்கை முன்னிட்டு பள்ளி சாவியை, ஏ.இ.இ.ஓ.,விடம் ஒப்படைக்க துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து உள்பட, ஏழு அம்ச கோரிக்கை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்), மார்ச், 6ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.
இதற்காக அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதேநேரம் மார்ச், 6ம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த போதிலும், மார்ச், 6ம் தேதி எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரியர்களை பயன்படுத்தி பள்ளியை நடத்த முடிவு செய்துள்ள கல்வித்துறை, இதற்காக போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலை கேட்டுள்ளது.
துவக்க, நடுநிலைப்பள்ளியின் சாவி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பில் இருக்கும். பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மார்ச், 6ல் (நாளை ) நடக்கும் ஸ்டிரைக்கில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால், பள்ளி சாவியை அந்தந்த ஒன்றிய, ஏ.இ.இ.ஓ.,க்களிடம் இன்று மாலை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக