முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 17 மார்ச், 2014

தஞ்சாவூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டம் - 16.03.2014

தஞ்சாவூர் மாவட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் கூட்டம் , கும்பகோணம் சாரங்கபாணி கோவில் அருகில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் 16.03.2014 ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் திரு. ஆர். வெங்கட்ரமணி தலைமை தாங்கினார்.

தஞ்சை மாவட்டத்தலைவர் திரு. பி. ஐயப்பன், மாவட்டச் செயலாளர் திரு. முருகை. அருணாச்சலம், மாவட்டப் பொருளாளர் என். பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இக்கூட்டத்தில் அருகமை மாவட்ட நிர்வாகிகள் கடலூர் செந்தில், நாகை முத்துராமன், செம்பை ஜான்சன், மயிலாடுதுறை ஸ்டாலின் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக