தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 9-2-2014 ஞாயிறு அன்று நடைபெற்றது.
கோரிக்கைகள்
1. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும் .
2. 01.06.2006க்கு முன்னர் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் .
3. தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திலிருந்து 50 சதவிகிதத்தை பதவி உயர்வு மூலம் வழங்கிட வேண்டும் .
4. இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தினை வழங்க வேண்டும் .
5. பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் .
6. ஆசிரியர் தகுதித்தேர்வினை முற்றிலுமாக ரத்து செய்திட வேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக