முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் 66–வது பிறந்த நாள்: 32 மாவட்டங்களிலும் அரசு சாதனை புகைப்பட கண்காட்சி

சென்னை, பிப். 18– தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்த நாளை முன்னிட்டு 32 மாவட்டங்களில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்படும்.

இப்புகைப்படக் கண்காட்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று திறந்து வைப்பார்கள்.

செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் புகைப்படக் கண்காட்சிகள் 24–ந்தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலை நகரங்களில் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் நடத்தப்படும். இப்புகைப்படக் கண்காட்சிகள் திறப்பு விழாவில், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பிப்பார்கள்.

இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழக முதல்–அமைச்சர் நாட்டுக்கு உழைத்த தலைவர்களுடன் உள்ள அரிய புகைப்படங்கள், தமிழ்நாடு முதல்–அமைச்சர் பங்கேற்ற அரசு விழாக்கள், கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க புகைப்படங்கள் இடம்பெறும். இக்கண்காட்சியினைப் பொதுமக்கள் பார்வையிட்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


செய்தியை மாலை மலர் இணையதளத்தில் படிக்க ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக