முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 28 ஜனவரி, 2014

தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு முடிவை மேலும் ஒரு மாதம் தள்ளிவைத்து வெளியிட, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்காக நடந்த தேர்வை, 12.21

லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என, கூறப்பட்டது. குரூப் - 4 தேர்வை, பட்டதாரிகளும் எழுதியுள்ளனர். இவர்கள், குரூப் - 2 தேர்வையும் எழுதியுள்ளனர். 

2012ல் நடந்த குரூப் - 2 தேர்வில், நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவை, இன்னும், தேர்வாணையம் வெளியிடவில்லை. குரூப் - 2 தேர்வு முடிவிற்கு முன், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட்டால், முதலில், கிடைத்த வேலையில் சேரலாம் என,முடிவெடுத்து, பட்டதாரிகளும், குரூப் - 4 வேலையில் சேர்வர்.

பதவி உயர்வு :

பின், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிடும்போது, அதில் தேர்ச்சி பெற்றால், குரூப் - 4 வேலையை கைவிட்டு, அதிக சம்பளம், விரைவாக,அதிகாரி நிலைக்கு பதவி உயர்வு ஆகிய சிறப்புகளை கொண்ட, குரூப் - 2வேலைக்கு வருவர்.இதனால், குரூப் - 4 நிலையில், மீண்டும் காலி பணியிடம் ஏற்படும்.

இதற்கு, மீண்டும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டியிருக்கும். இந்த சிக்கலை மனதில் கொண்டு,முதலில், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிட்டு, பணி நியமனம் வழங்கியபின், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, தேர்வாணையம் திட்டமிட்டு உள்ளது. குரூப் - 2 சான்றிதழ் சரிபார்ப்பு, இரு வாரம் வரை நடக்கும் என்பதால், 20 நாள் முதல், 25நாள் கழித்தே, குரூப் - 4 தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள், தெரிவித்தன.

நன்றி - tnkalvi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக