முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 7 அக்டோபர், 2013

பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு "ரிசல்ட்' அறிவிப்பு எப்போது? கோவை மாவட்டத்தில் காத்திருப்பில் 1000 பேர்

கோவை : பகுதி நேர ஆசிரியர்களுக்கான தேர்வு, கோவை மாவட்டத்தில் நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் வேறு பணிகள் கிடைத்தும் சேராமல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பகுதிநேர பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு, ஜூலை 22 முதல் 24 வரை நடந்தது. மொத்தம் இருந்த, 124 காலியிடங்களுக்கு 1006 பேர் போட்டியிட்டனர். தேர்வு பெறுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 5000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவையில் பணியிடங்களை நிரப்ப, ஏப்., 26 முதல் 30 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கணினி பாடத்துக்கு 673 பேர், ஓவியத்துக்கு 104 பேர், உடற்கல்விக்கு 229 பேர் உட்பட 1006 பேர் பகுதி நேர ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தனர். 

தகுதியானவர்களை, முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளது. பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் முறையில், உடற்கல்வி-59 பேர், ஓவியம்-53, கணினி-12 உட்பட 124 பேரின் பட்டியல் தயார் செய்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது; தேர்வு பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பகுதிநேர ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்கள் கூறுகையில், "ஜூலையில் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் பற்றி எதுவும் தெரியவில்லை. உடனடியாக முடிவுகளை அறிவித்தால், தேர்வு பெறாதவர்கள் அடுத்து கிடைக்கும் பணியில் சேர முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் உள்ளோம்' என்றனர். 

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ""மாவட்டத்தில் காலி பணியிடங்கள் எண்ணிக்கையின் படி, தகுதி அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்துள்ளோம். தலைமை அலுவலகத்தில் இருந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் கிடைத்ததும். அதன் படி, பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார்.

ஜூலையில் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் பற்றி எதுவும் தெரியவில்லை. உடனடியாக முடிவுகளை அறிவித்தால், தேர்வு பெறாதவர்கள் அடுத்து கிடைக்கும் பணியில் சேர 
முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் உள்ளோம்.

 Thanks - Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக