சென்னை. ஜூன்.24., நேற்று பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய நீண்டநாள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும்படி சட்டசபை வளாகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்தனர்.
அனைவரையும் பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.செங்கோட்டையனிடம் தமிமுன் அன்சாரி அவர்கள் அழைத்து சென்றார்கள். சுமார் 15 நிமிடத்திற்கு சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் பிரச்சனைகளை முழுமையாக விளக்கினார்கள். அதை அனைத்தையும் கேட்ட அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து முழுமையாக கண்டறிய ஒரு கமிட்டி அமைப்பதாகவும், அந்த கமிட்டியின் கோரிக்கைகளை பரிசீலித்து செயல்படுத்துவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.
தங்களின் நீண்டகால பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதிற்க்காக பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தெரிவித்தனர்.
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
சட்டமன்ற வளாகம்.
23.06.2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக